search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈரோடு கலெக்டர் அலுவலகம்"

    கணவருடன் தன்னை சேர்த்து வைக்ககோரி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் கர்நாடக பெண் புகார் மனு அளித்துள்ளார்.
    ஈரோடு:

    கர்நாடக மாநிலம் கொள்ளேகால் பகுதியைச் சேர்ந்தவர் அனிதா (வயது 35). இன்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார்.

    எனக்கும் ஈரோடு மாவட்டம் மூலப்பாளையம் டெலிபோன் நகரைச் சேர்ந்த உமா சங்கர் என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. எங்களுக்கு லக்‌ஷனா, லட்சுமணா என இரட்டை குழந்தைகள் உள்ளனர். தற்போது என் குழந்தைகள் 4-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

    இந்நிலையில் என் கணவரது வீட்டார் என்னை வீட்டை விட்டு விரட்டி விட்டனர். என் குழந்தைகளையும் அவர்கள் வைத்துள்ளனர்.

    இது சம்பந்தமாக ஏற்கனவே காவல் நிலையங்களில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே என் கணவரை என்னோடு சேர்த்து வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.

    பின்னர் மனுவை அனிதா கலெக்டர் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த புகார் பெட்டியில் போட்டார். #tamilnews
    சித்தோடு கோணம் வாய்க்கால் பகுதியில் டாஸ்மாக் கடை வேண்டாம் என கைக்குழந்தைகளுடன் பெண்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது .கூட்டத்திற்கு கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கிக் கொண்டிருந்தார்.

    பவானி தாலுகா மயிலம்பாடி கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் தங்களது குழந்தைகளுடன் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

    சித்தோடு கோணம் வாய்க்கால் பிரிவு பகுதியில் இயங்கி வந்த அரசு டாஸ்மாக் கடை தற்போது பவானி மயிலம்பாடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட போத்த நாயக்கன் புத்தூரில் நெடுஞ்சாலை ஓரம் உள்ள பகுதியில் அமைய உள்ளது.

    போத்த நாயகன் புத்தூர் சுற்றி சுமார் ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகிறோம் மேலும் இப்பகுதியில் கல்வாநாயக்கனூரில் தொடக்கப்பள்ளியும் மகளிர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் இயங்கி வருகிறது.

    இதனால் இந்த பகுதியில் எப்போதும் பெண்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.

    எனவே மேற்படி இடத்தில் டாஸ்மாக்கடை வந்தால் இந்த பகுதி நடந்து செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு பிரச்சினை ஏற்படும் மேலும் கல்லூரி பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் அச்சத்துடனேயே பள்ளிக்கு செல்லும் சூழ்நிலை உருவாகும். எனவே இந்த பகுதிக்கு வர இருக்கும் டாஸ்மாக் கடையை வேறு ஒரு பகுதிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவர் அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளனர். #tamilnews
    ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்தி பேசிய தா பாண்டியனை கைது செய்ய வேண்டும் என்று ஈரோடு கலெக்டரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. #thapandian

    ஈரோடு:

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா பாண்டியன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்தி பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து அந்த குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் தா. பாண்டியனுக்கு கண்டனம் தெரிவித்து வந்தனர்.

    இந்நிலையில் இன்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.

    அப்போது ஒரு சமூகத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு வந்து மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

    இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா பாண்டியன் கடந்த சில நாட்களுக்கு முன்பு பேட்டியின் போது காஜா புயல் பாதிப்பு பற்றி பேசியபோது சாமியார்களும் பண்டாரங்களும் பழையபடி நம்மை பண்டாரமாக்க முயற்சிக்கின்றனர் என்று கூறினார். இது எங்கள் சமூகத்தை சேர்ந்த மக்களை புண்படுத்துவதாக உள்ளது.

    தா.பாண்டியன் மீது வழக்குபதிவு செய்து அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தா பாண்டியன் நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட வேண்டும் இல்லையென்றால் சென்னையில் உள்ள அவரது வீட்டை முற்றுகை இடுவோம்.

    இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளனர்.

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டை கண்டித்து ஈரோடு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட வந்த நாம் தமிழர் கட்சியினர் 21 பேர் கைது செய்யப்பட்டனர்.



    ஈரோடு:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனை தொடர்பாக கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க ஆயிரக்கணக்கான மக்கள் கலெக்டர் அலுவலகத்தை நோக்கி சென்றனர். அப்போது ஆர்ப்பாட்டக்காரர்களும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. வன்முறையை ஒடுக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத் தினர். இதில் பொதுமக்கள் 13 பேர் உயிரிழ்ந்தனர்.

    இந்த சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்திலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகிறது.

    இன்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட போவதாக நாம் தமிழர் கட்சியினர் அறிவித்திருந்தனர்.

    ஸ்டெர்லெட் ஆலையை மூட வலியுறுத்தியும், பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி கொன்ற போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழக அரசையும், காவல்துறையை கண்டித்தும் முற்றுகையிட போவதாக அறிவித்திருந்தனர்.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கை இன்ஸ்பெக்டர் விஜயன் தலைமையிலான போலீசார் கலெக்டர் அலுவலகத்தை சுற்றி நின்றிருந்தனர்.

    மாநகர் மாவட்ட செயலாளர் மாதையன், மாநகர மாவட்ட தலைவர் ரகுபதி தலைமையிலான நாம் தமிழர் கட்சியினர் ஈரோடு டீச்சர்ஸ் காலனி அருகே ஒன்றாக திரண்டனர். பின்னர் போலீசாரை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் கோ‌ஷம் எழுப்பியவாறு வந்தனர்.

    இன்ஸ்பெக்டர் விஜயன் தலைமையிலான போலீசார் டீச்சர் காலனி பிரிவில் தடுப்பு வேலிகள் அமைத்து அவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர்கள் பெருந்துறைக்கு செல்லும் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

    இதையடுத்து நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் 21 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    ×